ஆண்களுக்கான தீர்வு

ஆண்மை குறை நீக்க

நரம்பு தளர்ச்சி,விந்து முந்துதல், விந்து நீர்த்து சக்தி,விந்து அணுக்கள் குறைப்பாடு, குழந்தை இன்மை காண தீர்வு

போதை வஸ்துகளில் ஏற்படும் பாதிப்பு தீர

சரும வியாதிகளுக்கான தீர்வு

சிறுநீர் கல் நோய்க்கான தீர்வு

சிறுபீளை, சிறுநெருஞ்சில் ஆகியவற்றைச் சம அளவு சமூலமாகஎடுத்து மை போல் அரைத்துக் கொட்டைப் பாக்களவு கால் லிட்டர்தயிரில் காலை மாலையாய் 60 நாள் சாப்பிடச் சிறுநீர்க்கல் கரையும்.10 கிராம் நத்தைச் சூரி விதையை வறுத்துப் பொடித்து நீரிலிட்டுக்காய்ச்சி வடிகட்டிப் பால் சர்க்கரை கலந்து காலை மாலை சாப்பிட்டுவரக் கல்லடைப்பு, சதையடைப்பு, வெள்ளை ஆகியவை தீரும்.சிறுகீரை வேர், நெருஞ்சில் வேர், சிறுபூனை வேர், சீரகம் வகைக்கு40 கிராம் சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சிகாலையில் பாதி மாலையில் பாதியாய்க் குடித்து வரக் கல்லடைப்புத்தீரும். வாழைத் தண்டினைச் சமைத்துண்ணச் சிறுநீரகக் கல் கரையும்.நீர்க்கட்டு மூக்கிரட்டை வேர் 1 பிடி, அறுகம் புல் 1 பிடி, கீழாநெல்லி 1 பிடி.

நெருஞ்சில் 1 பிடி, மிளகு 10 சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டுக்

கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை சாப்பிடத் தீரும்.

20 கிராம் சிறுபூளை வேரைச் சிதைத்து 1 லிட்டர் நீரிலிட்டுக் காய்ச்சி

125 மி.லி ஆக்கி வடிகட்டி 2 வேளை கொடுத்து வரத் தீரும்.

சங்கம் வேர்ப்பட்டைச் சாறு 4 தேக்கரண்டி 100 மி.லி. வெள்ளாட்டுப்

பாலில் குடித்து வரத் தீரும்.